உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை + "||" + Prisoner who went to see his girlfriend in Australia

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கான்பெர்ரா,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஏராளமான நபர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அந்த ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜொனாதன் டேவிட் (வயது 35) என்ற வாலிபர் போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே சென்றார்.

ஆனால் வழியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர் சிக்கினார். அதனை தொடர்ந்து ஊரடங்கை மீறியதாக கூறி போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் உணவு வாங்குவதற்காக ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். எனவே நீதிபதி அவருக்கு தண்டனை எதுவும் வழங்காமல் எச்சரித்து அனுப்பிவைத்தார்.

எனினும் அடுத்த சில மணி நேரத்தில் ஜொனாதன் டேவிட் மீண்டும் ஓட்டலில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே அவரை போலீசார் மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தனது காதலியை பார்க்க ஓட்டலில் இருந்து வெளியே வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு 1 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை
நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு சளி, மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
2. தானிப்பாடியில் ஊரடங்கை மீறி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் 30 பேர் கைது
ஊரடங்கை மீறி தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுப்பு: சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது - போக்குவரத்து போலீசார் அதிரடி
ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை அண்ணா சாலையை போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் மூடினர்.
4. தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
5. போலி கையெழுத்து போட்டு மோசடி: இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ததாக இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.