உலக செய்திகள்

அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்; டிரம்ப் + "||" + I am the president who works hard from early morning to midnight; Trump

அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்; டிரம்ப்

அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான்; டிரம்ப்
அதிகாலை முதல் நள்ளிரவுவரை கடினமாக உழைக்கும் ஜனாதிபதி நான்தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மதிய வேளையில்தான் அலுவலகத்துக்கு வருவதாகவும், தனது படுக்கையறையில் தனக்கு பிடித்தமானதை சாப்பிட்டு மகிழ்வதாகவும் ஒரு அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும்வகையில், டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை பற்றி தெரியாத ஒரு மூன்றாம்தர நிருபர், எனது பணி மற்றும் உணவு பழக்கம் பற்றி பொய்யாக எழுதி உள்ளார். என்னை பற்றி தெரிந்தவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே கடினமாக உழைப்பவன் நான்தான் என்று கூறுகிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், நான் கடின உழைப்பாளி. அதிகாலையிலேயே அலுவலகத்துக்கு வந்து, நள்ளிரவுவரை வேலை பார்க்கிறேன். சில மாதங்களாக, நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்றதில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான போர்: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
2. தமிழ் புத்தாண்டு ஜனாதிபதி-துணை ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது
நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்து உள்ளார்.