உலக செய்திகள்

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தகவல்...? + "||" + KIM PARADE PREP North Korea satellite images spark speculation plans for a massive funeral parade for Kim Jong-un are underway

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தகவல்...?

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தகவல்...?
வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
வாஷிங்டன்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிம் ஜாங்  மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ளது.இருப்பினும் அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் உள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த திடீர் ராணுவ அணிவகுப்பு தயாரிப்புகள் ஏன் என்ற மர்மம் எதிர்வரும் நாட்களில் விலகும் என நம்பப்படுகிறது. கிம் ஜாங் உன் குறித்து உறுதியாக எந்த தகவலும் வெளிவராத நிலையில், 

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் ரெயில் நிற்பது கண்டறியப்பட்டு உள்ளது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான ஆதாரங்களைத் தேடும் அமெரிக்க  உளவு செயற்கைக்கோள் புகைப்படங்களில் இது சிக்கி உள்ளது.

மர்மம் தீர்க்கப்படும் வரை, ரயிலின் நகர்வுகள் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால்  தீவிரமாக கண்காணிக்கப்படும். இல் ரெய்பெரியதாகவும் மெதுவாகவும் பயணிப்பதால் விண்வெளியில் இருந்து கண்டுபிடிப்பது கடினம் அல்ல.

வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு பின்னர் தலைநகர் பியோங்யாங்கில்உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்றும், அதுவும் எதிர்வரும் வாரங்களில் என நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கடந்த 11 ஆம் தேதியில் இருந்தே பொதுவெளியில் தென்படாத வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அந்த பிராந்தியத்தில் இருந்து வெளியாகும் தகவலின்படி, இதய அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் மரணமடைந்துள்ளார் என்பதே.மேலும், தற்போது தயார்ப்படுத்தப்படும் ராணுவ அணிவகுப்பானது வடகொரிய தலைவருக்கானதாக இருக்கலாம் எனவும், காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் மாரடைப்பால் மரணமடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிரிம் ராணுவ அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகாமையிலேயே தற்போது தற்காலிகமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி மாதம் தலைநகரில் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா ராணுவ அணிவகுப்பில் உலகின் சக்தி வாய்ந்த ஆயுதம்
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக் கூடிய ஒரு புதிய ரக இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணையை வட கொரியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என வட கொரியா கூறி உள்ளது.
2. வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை
வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. வடகொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ரகசிய முகாம்கள் அதிர்ச்சி தகவல்
வடகொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு என இரகசிய முகாம்கள் செயல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி: எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைப்பு
வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.