வடகொரிய தலைவர் கிம்மின் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம்


வடகொரிய தலைவர் கிம்மின் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம்
x
தினத்தந்தி 29 April 2020 11:30 AM GMT (Updated: 29 April 2020 11:30 AM GMT)

வடகொரிய தலைவர் கிம்மின் மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என முன்னாள் சமையல்காரர் கூறி உள்ளார்

சியோல்

வடகொரிய தலைவர் கிம்மின் மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.உணவுப்பிரியரான கிம் ஜாங் விலையுயர்ந்த மாட்டுக்கறி, சீஸ் மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையற் கலைஞர் தெரிவித்துள்ளார்.

வெறும் 36 வயதேயான கிம் ஜாங் தற்போது 127 கிலோ உடல் எடையுடன் உள்ளார் என்பதும், அவரது சிகிச்சைக்கு காரணம் என்கிறார்கள். கிம்மின் முன்னாள் சமையற் கலைஞர் கெஞி புஜிமோட்டோ, உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதையும் வைத்துக் கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

2015 காலகட்டத்தில் நாளுக்கு 175 பவுண்டுகள் மதிப்பிலான இரண்டு போத்தல் மதுவை குடித்து முடிப்பதாக கூறி உள்ளார்.

பெரும்பாலான வடகொரிய மக்கள் ஒருவேளை உணவுக்கே அல்லல் படும் நிலையில், கிம் ஜாங் பெரு விருந்தில் களிப்பது சர்வதேச பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் அதைப்பற்றி கவலை கொள்ளாத கிம் ஜாங், தமது உணவுப் பட்டியலில் போயி கிராஸ் மற்றும் சுமார் 240 பவுண்டுகள் வரை விலைகொண்ட ஜப்பானிய வாக்யூ பீப் என இடம்பெற செய்துள்ளார். அது மட்டுமின்றி, கிம் ஜாங் சீன பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருங்து தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு அடிமை என கூறப்படுகிறது.

Next Story