சீன அதிபர் ஜி ஜின்பிங் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து


சீன அதிபர் ஜி ஜின்பிங் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து
x
தினத்தந்தி 1 May 2020 10:42 AM GMT (Updated: 1 May 2020 10:42 AM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங் தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீஜிங், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் முதலில் தோன்றினாலும், சீனா எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மே தினத்தை முன்னிட்டு, செங்சோ மாநகரிலுள்ள யுவான்ஃபாங் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அக்கடிதத்தில், மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள யுவான்ஃபாங் குழு  நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீரென நிகழ்ந்த கொரோனா வைரஸைச் சமாளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா வைரசை எதிர்த்து போராடும் முன்னணி மருத்துவ ஊழியர்கள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் பங்கேற்றவர்கள்,  துப்புரவுத் தொழிலாளர்கள், டெலிவரி செய்பவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வரை, ஏராளமான உழைக்கும் மக்கள் அந்தந்த பதவிகளில் தங்களது பங்களிப்புகளைச் செய்துள்ளனர், மேலும் தொற்றுநோயை வெல்ல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், சீனாவின் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் அதிக பங்களிப்பு செய்ய தத்தமது பதவியில் சுறுச்சுறுப்பாக உழைத்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

இதன் மூலம், கொரோனா வைரஸுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையுடன் வலிமை வாய்ந்த சக்தியாக ஒன்று திரண்டுள்ளனர் என்று ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Next Story