உலக செய்திகள்

ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம் + "||" + The death of Hollywood actor Sam Lloyd

ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்

ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் தனது 56 வயதில் மரணமடைந்தார்.
நியூயார்க், 

பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

சாம் லாய்ட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மறைந்த சாம் லாயிட்டுக்கு வனேஸ்ஸா என்ற மனைவியும், வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாய்ட்டின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் பிரபலமானவர்: மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் தவசி மரணம்
மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம் அடைந்தார்.
2. வியாபாரி செல்வமுருகன் மரணம்: "காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்" - மு.க.ஸ்டாலின்
வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக, தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு
பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
4. மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம்
மராட்டிய முன்னாள் மந்திரி விநாயக்தாதா பாட்டீல் மரணம் உத்தவ்தாக்கரே இரங்கல்.
5. பெங்களூருவில் இந்திய விமானப்படை முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம்
பெங்களூருவில், இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம் அடைந்தார்.