உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,90,590 ஆக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,90,590 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 May 2020 1:59 PM GMT (Updated: 4 May 2020 1:59 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 35,90,590 ஆக உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 2,000 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா-வியட்நாம் இடையான போரில் இறந்த அமெரிக்கர்களை விட தற்போது கொரோனாவால் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 35,90,590 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2,49,014 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 11,65,871 பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 11,89,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 68,633 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,78,671 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் 2,48,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 25,428 பலியாகி உள்ளனர். மேலும் 1,51,633 பேர் குணமடைந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா தொற்றால் 2,10,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 28,884 பலியாகி உள்ளனர். மேலும் 81,654 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தபடியாக இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் தற்போது 1,86,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 28,446 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமாகி உள்ளனர். அடுத்ததாக பிரான்சில் 1,68,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் 24,895 பேர் பலியாகி உள்ளனர். 50,784 பேர் குணமடைந்துள்ளனர்.

Next Story