அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப்


அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 6 May 2020 3:05 AM GMT (Updated: 6 May 2020 3:05 AM GMT)

அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

பீனிக்ஸ்:

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள ஹனிவெல் தொழிற்சாலையை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பார்வையிட்டார். கொரோனா வைரஸ்  தொடங்கிய பின் அறிவிக்கபட்ட ஊரடங்கில் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாகும்.

மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிறர் பயன்படுத்தும் முககவசங்களை தயாரிக்கும் ஹனிவெல் தொழிலாளர்களைப் பாராட்டிய டிரம்ப், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது என்று  வலியுறுத்தினார்.நான் ஒரு உற்சாக வீரராக இருக்க விரும்புகிறேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டொனால்டு டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை  மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்என்று கூறினார்.

பின்னர் டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது  சமூக தொலைதூர நடவடிக்கைகளை நீக்குவதும், மூடப்பட்ட பொருளாதார அமைப்புகளை மீண்டும் திறப்பதும் அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என கூறினார்.

Next Story