அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 6 May 2020 5:37 AM GMT (Updated: 6 May 2020 6:48 AM GMT)

கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

வாஷிங்டன்

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டாக்டர் பிங் லியூ அவரது வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு  காயங்களுடன்  சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று ரோஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.லியூவை வீட்டில் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர் அவரது காரில் இறந்து கிடந்துள்ளார். லியூவை கொன்ற அந்த நபர் தனது காருக்கு திரும்பி வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என போலீசார் நம்புகிறார்கள், ஆனால், லியூ சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் குறிவைக்கப்பட்டதாக காட்டும் எந்த ஆதாரமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கான செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள அவர் ஆய்வு செய்து வந்தார்.

Next Story