உலக செய்திகள்

நைஜரில் பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயல்: மக்கள் அதிர்ச்சி + "||" + A sand storm that swept several hundred meters high in Niger: People's shock

நைஜரில் பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயல்: மக்கள் அதிர்ச்சி

நைஜரில் பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயல்: மக்கள் அதிர்ச்சி
நைஜரில் பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயலால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நியாமி, 

கொரோனா அச்சம் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நைஜர் நாட்டு மக்களை நேற்று மேலும் ஒரு கொடூர பீதி சூழ்ந்தது.

நைஜர் தலைநகர் நியாமி மீது ஒரு பெரிய மணல் புயல் நேற்று வீசியது. இந்த புயலால், கட்டிடங்கள் அனைத்தும் சிவப்பு நிற தூசுகளால் மூடப்பட்டன. 

பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயலால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த புயல் அங்கு சில நிமிடங்கள் நீடித்தது, மதியநேரத்தில் இந்த புயலால் நகரமே சிவப்பு நிறமாக தோற்றமளித்தது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தப் புயல் காரணமாக விமானப் போக்குவரத்து அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் வறண்ட காலங்களில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மணல் புயல்கள் வீசுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

1. நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - 20 பேர் உயிரிழப்பு
நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
2. நைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு
நைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிக்கப்பட்டனர்.
3. நைஜரில் சோகம்: அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல்; 22 பேர் பலி
நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் எற்பட்ட நெரிசல் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
4. நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 25 வீரர்கள் பலி
நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக 63 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
5. நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி
நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.