உலக செய்திகள்

போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றும் வடகொரிய தலைவர் தலை சுற்றவைக்கும் சர்ச்சைகள் + "||" + KIM JONG-UN, DEUX, TROIS Kim Jong-un body doubles revealed to the world as dictator natters to TWO lookalikes before missile test

போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றும் வடகொரிய தலைவர் தலை சுற்றவைக்கும் சர்ச்சைகள்

போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றும் வடகொரிய தலைவர் தலை சுற்றவைக்கும் சர்ச்சைகள்
வடகொரியா தலைவர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், தற்போது வந்தது அவர் தானா? என்றே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்கு மேலாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திடீரென்று கடந்த 1-ஆம் நாட்டின் தலைநகர் பியோயாங்கில் இருக்கும் உரத்தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது வந்தது கிம் தானா? என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் டோரி எம்.பி லூயிஸ் மென்ஞ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்போது வந்த கிம்மின் பற்களும், இதற்கு முன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வேறு மாதிரி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா மாநில ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படத்தில் பற்கள் நன்றாக இருக்கிறது.அதே சமயம் லூயிஸ் மென்ஞ் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய கிம்மின் புகைப்படத்தையும், வடகொரியா மாநில ஊடகங்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் (பற்கள் நன்றாக இருக்கிறது) வேறு மாதிரி உள்ளன.

அதுமட்டுமின்றி கிம் ஆள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளார். கண்ணம் எல்லாம் முன்பு இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு சதைபோட்டு உள்ளது. இதற்கு அவருடைய முந்தைய உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது வந்த கிம்மின் காதுக்கும், அதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கும் கிம்மின் காதுக்கும் வித்தியாசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடுமையாக செயல்படும் ஜெனிபர் ஜெங் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த 1-ஆம் தேதி வந்த கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள், பல், காது, முடி மற்றும் அவருடைய சகோதரி என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், முன்பை விட கிம் இப்போது மிகவும் உடல் அளவில் ஏதோ பிரச்சினை சந்தித்து வருகிறார். அதற்கு அவருடைய உடல் மாற்றங்களே உதாரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏவுகணை சோதனை நடத்தப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.


அதில் கிம்முடன் இருக்கும் நபர் அவரைப் போன்றே தோற்றமளிக்கும் உடை அணிந்துள்ளார். அவரின் கால்பேண்ட்டின் குதிகால் அப்படியே கிம் உடை போன்றும், முடிவெட்டும் கூட அவருடன் ஒத்துப் போவதாக குறிப்பிட்டுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தும் நாடாக வடகொரியா உள்ளது. ஏனெனில் பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனைகள் செய்ய வேண்டாம் என்று கூறிய போதும், தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக, மீண்டும், மீண்டும் சோதனை செய்தது.

இது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. அதன் பின் தன் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக இந்த அணு ஆயுத சோதனை எல்லாம் வடகொரியா நிறுத்தி வைத்திருந்தது.அதன் பின் அமெரிக்கா பொருளாதார தடையை நீக்காததால், மீண்டும் தன்னுடைய பலத்தை காட்ட அணு ஆயுத சோதனையை அவ்வப்போது செய்து வருகிறது. இதன் மூலம் வடகொரியா அதிபர் பல நாடுகளை பகைத்துள்ளார் என்று மேலும் உள்நாட்டிலும் அவருக்கு எதிரிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.  

இதனால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள், துரோகிகள் மற்றும் படுகொலையில் இருந்து தப்பிப்பதற்கு கிம் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஹிட்லர் மற்றும் சதாம் உசேன் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் பல தன்னைப் போன்று தோற்றமளிக்கும் நபர்களை பயன்படுத்தியதாக கோட்பாடுகள் நம்புகின்றன. அதே பாணியை கிம் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. என்ன ஆனார்... வடகொரியா அதிபர் சகோதரி... ஆபத்தில் இருக்கலாம்..?
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா அதிபர் சகோதரியைப் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் ஆபத்தில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2. கிம் ஜாங் இறந்திருக்கலாம் - அமெரிக்கா; கோமாவில் - தென் கொரியா தகவல்களை பொய்யாக்கும் புகைப்படங்கள்
கிம் ஜாங் இறந்திருக்கலாம் -அமெரிக்கா; கோமாவில் - தென் கொரியா கூறிய நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு வடகொரியா அவர் உயிருடன் இருப்பதாக கூறி உள்ளது.
3. திடீர் என தோன்றிய கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து மீண்டும் சதேகத்தை எழுப்பிய ஜப்பான்
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழுத் துவங்கியுள்ளது.