உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் + "||" + Great earthquake in Indonesia; people take shelter in the streets

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ஜகார்த்தா, 

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அந்த நாடு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தின் தெங்கரா பாரத் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 133 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதே போல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் தகவல்கள் இல்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மலுகு மாகாணத்தின் தலைநகர் அம்போனில் 6.8 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 36 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது
இந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.
2. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்
இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.
3. குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் தான் கர்ப்பமானதாக கூறும் அதிசயபெண்
இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5. 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட முதியவர் மரணம்
300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தோனேசியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...