உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு + "||" + China conducts first successful coronavirus COVID-19 vaccine test on monkeys

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு
கொரோனா தடுப்பு மருந்தை சீனா வெற்றிகரமாக கண்டு பிடித்து உள்ளது.குரங்குகளுக்கு கொடுக்கபட்டு நடத்தபட்ட சோதனை வெற்றி அடைந்து உள்ளது.

பெய்ஜிங் 

கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும்  பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன. 

இந்த நிலையில்  சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.

 ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; 90% பேருக்கு அறிகுறி தெரியாது
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அறியாமல் வாழ்வர் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு : இளம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது - சர்வதேச தொழிலாளர் அமைப்பு
கொரோனா பாதிப்பு இளம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறி உள்ளது.
3. சென்னை உள்பட 11 நகரங்களில் 5-வது கட்ட ஊரடங்கு தொடர வாய்ப்பு...?
சென்னை உள்பட 11 நகரங்களில் 5-வது கட்ட ஊரடங்கை தொடர்ந்து அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
4. முற்றும் மோதல்: கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி
நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும்,விமானங்களும் ஓடுகின்றன இதனால் தான் கொரோனா அதிகமாக் பரவுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் தனிமைபடுத்தலில் 23 லட்சம் பேர்; அடுத்த கட்ட ஊரடங்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை
கொரோனா பாதிப்பால நாடு முழுவதும் 23 லட்சம்பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்