வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி


வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 May 2020 12:20 AM GMT (Updated: 9 May 2020 12:20 AM GMT)

வங்காளதேசத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.

டாக்கா, 

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க குடியிருப்புக்கு கீழ் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று காலை கழிவுநீர் தொட்டி திடீரென வெடித்தது. இதில் குடியிருப்பின் தரை தளத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த 12 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். அதேபோல் அடுக்குமாடி குடியிருப்பையொட்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையும் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வசித்து வந்த 28 வயது கர்ப்பிணி படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story