அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி


அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 9 May 2020 1:30 AM GMT (Updated: 9 May 2020 1:30 AM GMT)

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பெண் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 12.99 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  77 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து 2 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்.  அந்நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் மைக் பென்ஸ்.  இவரது பெண் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் கேத்தி மில்லர்.

அதிபர் டொனால்டு டிரம்பின் தலைமை உதவியாளரான ஸ்டீபன் மில்லரின் மனைவியான கேத்திக்கு, கொரோனா பரிசோதனையில் தொற்று ஏற்பட்டது உறுதியானது.  கடந்த வியாழ கிழமை டிரம்ப் நடத்திய இறைவணக்க நிகழ்ச்சியில் கேத்தி கலந்து கொண்டார்.

இதில் டிரம்ப் மற்றும் பென்ஸ் ஆகியோரது மனைவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  2ம் உலக போர் நினைவு தின நிகழ்ச்சியில் முக கவசம் அணியாமல் டிரம்ப் பங்கேற்ற நிலையில் இந்த பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது.  இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்து உள்ளது.

Next Story