சீனா தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை தள்ளி வைத்த இம்ரான்கான்


சீனா தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை தள்ளி வைத்த இம்ரான்கான்
x
தினத்தந்தி 9 May 2020 10:25 AM GMT (Updated: 9 May 2020 11:50 AM GMT)

சீனாவின் தலையீட்டால் பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிறுவனங்களின் மீதான விசாரணையை இம்ரான்கான் தள்ளி வைத்தார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் 16 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் (ஐபிபிக்கள்) சுமார் 60 பில்லியன் முதலீடு செய்துள்ளன. மேலும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் 400 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளன.

இதனை தொடர்ந்து  மின் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவதால் நாடு 4 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்ததாக ஏப்ரல் 21 அன்று இம்ரான் கான் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில்  மின் உற்பத்தியாளர்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்தும் படி இம்ரான்கான் உத்தரவிட்டு உள்ளார். இந்த விசாரணை 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த விசாரணை எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சீனாவில்  இருந்து வந்த  தெளிவான எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணை நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரக வட்டாரங்கள் கூறும் போது  சீன தூதர் யாவ் ஜிங் தலையிட்டு விசாரணை குறித்து தனது அரசின் வலுவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து விசாரணை இடைநிறுத்தப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தியதால் விசாரணையை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஷிப்லி ஃபராஸ்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Next Story