கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் - ஜோ பிடன் விமர்சனம்


கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார் - ஜோ பிடன் விமர்சனம்
x
தினத்தந்தி 9 May 2020 2:06 PM GMT (Updated: 9 May 2020 2:06 PM GMT)

கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 40,41,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,76,945 பேர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 13,23,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 78,639 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2,23,876 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக, அந்நாட்டு முக்கிய எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் முன்னரே தயாராகியிருக்க வேண்டும். டிரம்ப் அதைத் தவறவிட்டுவிட்டார். இதன் காரணமாக நமது தேசம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்  பறிபோய் உள்ளன. பல சிறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும் மட்டுமே உதவுகிறது” என்று கூறினார். 


Next Story