உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா தாக்கம் குறைகிறது + "||" + Corona impact in Italy diminishes

இத்தாலியில் கொரோனா தாக்கம் குறைகிறது

இத்தாலியில் கொரோனா தாக்கம் குறைகிறது
இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது.
ரோம், 

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாட்டில்தான் முதன் முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அங்கு இத்தாலி இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டது. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் சில நாட்களில் பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியும், நெருங்கியும் சென்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறைந்தபட்சமாக அங்கு கடந்த 2-ந் தேதி 174 பேர் இந்த நோய் தொற்றால் பலியாகினர். இந்த நிலையில் அங்கு கொரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத் தலைவர் சில்வியோ புருசபெரோ கூறுகையில், “தற்போது இத்தாலியின் 20 பிராந்தியங்களிலும் கொரோனா தொற்றுநோயில் வளைவு குறைந்து வருகிறது” என்று தெரிவித்து உள்ளார். எனினும் கொரோனாவால் அதிக உயிர் பலி ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் இத்தாலி இருக்கிறது. இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
2. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது.
4. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா
தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா
குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.