கைதிகளின் கொரோனா பரிசோதனையில் குழப்பம் - ஆஸ்திரேலிய சிறை முடக்கப்பட்டது


கைதிகளின் கொரோனா பரிசோதனையில் குழப்பம் - ஆஸ்திரேலிய சிறை முடக்கப்பட்டது
x
தினத்தந்தி 12 May 2020 12:12 AM GMT (Updated: 12 May 2020 12:12 AM GMT)

கைதிகளின் கொரோனா பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய சிறை முடக்கப்பட்டது.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அராரட் என்னும் சிறு நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள 200 கைதிகளுக்கும் அண்மையில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 3 பேருக்கு மட்டும் தொற்றின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மறு பரிசோதனை நடத்தியதில் தொற்று இல்லையென முடிவு வந்தது. இதனால் மூவருக்கும் மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கைதிகளின் பரிசோதனை குறித்த முடிவுகள் மாறி மாறி வந்ததால் அராரட் சிறை முடக்கி வைக்கப்படுவதாக விக்டோரியா மாகாண சிறை நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் இந்த சிறையில் இருந்து கைதிகள் யாரும் வெளியே செல்ல முடியாது. புதிய கைதிகள் யாரையும் உள்ளே கொண்டு சென்று அடைக்கவும் இயலாது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வளாகம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Next Story