சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் சுவீடன் ஓட்டல் - ஒரு மேஜையில் ஒருவருக்கு மட்டுமே உணவு


சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் சுவீடன் ஓட்டல் - ஒரு மேஜையில் ஒருவருக்கு மட்டுமே உணவு
x
தினத்தந்தி 13 May 2020 11:29 PM GMT (Updated: 13 May 2020 11:29 PM GMT)

சுவீடன் நாட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளில் சுவீடனும் ஒன்று. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு ‘டேபிள் பார் ஒன்’ என்ற பெயரில் சுவீடனில் ஒரு ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ரான்செஸ்டர் நகரை சேர்ந்த ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் என்ற தம்பதி இந்த ஓட்டலை நடத்தி வருகின்றனர். ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் வயல்வெளியில் ஒரு மேஜை, ஒரு நாற்காலியுடன் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டலில் சர்வர் யாரும் கிடையாது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் உணவு கூடையில் வைக்கப்பட்டு கயிறு மூலமாக மேஜைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஓட்டலில் வழக்கப்படும் உணவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் எதுவும் கிடையாது.

அதற்கு பதிலாக உணவின் தரம் மற்றும் சுவை பொறுத்து வாடிக்கையாளர் வழங்க விரும்பும் தொகையை கூடையில் வைத்துவிட்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story