சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை


சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 15 May 2020 1:27 AM GMT (Updated: 15 May 2020 1:27 AM GMT)

சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பீஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. இருப்பினும், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உகானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 10 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story