உலக செய்திகள்

ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Iran registers 2,102 new COVID-19 cases, 116,635 in total

ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரானில் இன்று ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்,

உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,60,457 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,04,309 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து 17,23,438 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஈரானிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 6,902 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 91,836 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 6,58,604 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்ந்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 19 பேர் உடல் கருகி சாவு
ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
4. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்தது
ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது ஈரான்.
5. அரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு 5 ஆண்டுகள் சிறை
ஈரானிய நடிகை தரனாஹ் அலிதூஸ்டி, அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் செய்ததாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.