கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 16 May 2020 12:12 AM GMT (Updated: 16 May 2020 12:12 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

உலகையே அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்திலும் நுழைந்துள்ளது.

அங்கு பணியாற்றும் ஐ.நா. ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐ.நா. சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் தொலை தொடர்பு மூலம் மேற்கொள்ள ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஐ.நா. சபையில் தலைமை அலுவலகத்தில் நேரடி சந்திப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் நீண்டகாலமாக நடந்து வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான அமர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story