உலக செய்திகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது- அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட் + "||" + Coronavirus cases strongly trending downward throughout US: Trump Read more

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது- அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது- அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

உலக அளவில்  வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.  அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா விழிபிதுங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு  820 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில், அமெரிக்காவில்  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “  சில விதி விலக்குகளை தவிர அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரியத்தொடங்கியுள்ளது.  இது உண்மையாக நல்ல விஷயம் தான்” என்று  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 6,959-பேருக்கு கொரோனா
மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று 345- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 1,987-பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 1,986 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று குறைந்தது
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.