உலக செய்திகள்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 பேருக்கு தொற்று + "||" + China reports 25 new coronavirus cases, Wuhan has highest asymptomatic infections

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 பேருக்கு தொற்று

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 பேருக்கு தொற்று
சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா கணிசமாக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், கடந்த சில தினங்களாக  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

ஹூபெய் மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில்,  உகான் நகரில் 14  பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உகான் நகரில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 337- ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், ஜிலின் மாகாணத்தில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. ஜிலின் மாகாணத்திலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,954-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 82 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை  4,634 -பேர் பலியாகியுள்ளனர். அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது கடும் சவாலாக இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.  

காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா இருக்கும் நபர்களால், பிற நபர்களுக்கு பரவுவது அதிகரிப்பதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சீனாவில்  உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டன. பள்ளிகளும் இயங்கத்தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.
தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
4. ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்
சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
5. விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா? - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்
விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில் அளித்துள்ளது.