சீனாவில் நிலநடுக்கம்- 2 பேர் பலி,13 பேர் காயம்


சீனாவில் நிலநடுக்கம்- 2 பேர் பலி,13 பேர் காயம்
x
தினத்தந்தி 19 May 2020 3:41 AM GMT (Updated: 19 May 2020 3:41 AM GMT)

சீனாவில் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங், 

சீனாவின் தென்மேற்கில் உள்ள  யுன்னான் மாகாணத்தின் கியாஜியோ கவுண்டியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  

நேற்று இரவு 9.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் பலியானதாகவும் 13 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story