ஜப்பானின் ஹோன்சு தீவில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம்


ஜப்பானின் ஹோன்சு தீவில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம்
x
தினத்தந்தி 19 May 2020 9:15 PM GMT (Updated: 19 May 2020 8:46 PM GMT)

ஜப்பானின் ஹோன்சு தீவில் 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


* நைஜீரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடல் கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்ட சீன கப்பலில் இருந்து 18 மாலுமிகளை நைஜீரிய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

* சீனாவுடன் ஒருபோதும் வர்த்தகப்போரில் ஈடுபட தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வர்த்தக மந்திரி சைமன் பர்மிங்ஹாம், ஆனால் ஆஸ்திரேலிய இறுக்குமதி பொருட்கள் மீது கடுமையான வரி விதிப்பதன் மூலம் சீனா மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

* ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொன்று குவிக்கப்பட்டு வருவதால் அங்கு உடனடியாக வன்முறையை குறைக்க தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் ஐ.நா. சபை அழைப்பு விடுத்துள்ளது.

* ஜப்பானின் ஹோன்சு தீவில் 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story