உலக செய்திகள்

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்க மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் + "||" + Bill to recall US companies from China: filing in US parliament

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்க மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்க மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திரும்ப கொண்டுவர அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் விவகாரத்தால், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது. கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்த சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை அழைத்து வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ‘அமெரிக்க நிறுவனங்களை தாயகம் கொண்டுவரும் மசோதா’ என்ற மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் கிரீன் என்ற செல்வாக்கு மிகுந்த எம்.பி. தாக்கல் செய்தார்.

மசோதாவில், மார்க் கிரீன் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். ஆனால், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இடம்பெயருவதற்கு செலவுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சர்வதேச ரீதியாக, பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், நாடு விட்டு நாடு செல்வது அதிக ஆபத்தும், அதிக செலவும் நிறைந்தது என்பதுதான் நிறைய நிறுவனங்களுக்கு தயக்கமாக இருக்கிறது.

சீனா, நம்பகத்தன்மையற்ற கூட்டாளி என்று நிரூபித்து விட்டது. எனவே, அமெரிக்கா மீண்டும் வளர்வதற்கும், சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கும் வாய்ப்புகளுக்கு கதவை திறந்து வைப்பது நல்லது. சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெயர்வதற்கான செலவுகளுக்காக ஊக்கத்தொகை அளிப்போம். எனது மசோதா, வளர்ச்சிக்கு ஏற்றது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
சீனாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.
தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
4. ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்
சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
5. சீனாவுடனான மோதல் விவகாரம்: மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
சீனாவுடனான மோதல் விவகாரம் தொடர்பாக, மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.