உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை - வங்காள தேச டாக்டர்கள் சாதனை + "||" + Bangladesh medical team says Ivermectin with antibiotic Doxycycline works to treat COVID-19 patients

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை - வங்காள தேச டாக்டர்கள் சாதனை

கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணமடைய புதிய மருந்து கலவை - வங்காள தேச டாக்டர்கள் சாதனை
கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
டாக்கா

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவித்து வருகின்றன.உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடந்த 6 மாதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்றளவும் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பு மருந்தினை கண்டறியவில்லை. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறி வருகின்றன. இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற டாக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது.

தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர்.

60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4 ஆம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாச பிரச்சினை சீரடைந்தும், 4 ஆம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன.மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை
மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் தலையை வெட்டி கொன்ற பூசாரி
4. கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை-முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.