அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு


அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 9:15 PM GMT (Updated: 20 May 2020 8:17 PM GMT)

அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.


* பாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வெண்டிலேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட 14 டன் மருத்துவ பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

* ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த டி.எஸ். திருமதி, பதவியேற்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

* தைவான் மீது சீனாவின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென், தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக நேற்று பதவியேற்றார்.

* தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கை 31-ந்தேதி வரை நீட்டித்து அதிபர் இவான் டியூக் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

* அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.

Next Story