உலக செய்திகள்

சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு + "||" + Indian Virus Looks More Lethal Than Chinese, Italian": Nepal PM's Attack

சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு

சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு
சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் கொடியது என்று நேபாள பிரதமர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு,

இந்திய பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நேபாளம்,  இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது. 

நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி, “நேபாளத்தில் இதற்கு முன்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கொரோனா பரவியுள்ளது.நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தேசிய  ஊரடங்கு  கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது.
3. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
4. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று நோய் 7 பேர் பலி ; 60 பேர் பாதிப்பு
சீனாவில் உண்ணி கடியால் பரவும் புதிய தொற்று நோயால் 7 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
5. சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலி
சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலியாகினர்.