உலக செய்திகள்

நாம் தொடும் மேற்பரப்புகள்- பொருட்களின் மூலம் கொரோனா எளிதில் பரவாது - அமெரிக்க நோய் தடுப்பு மையம் + "||" + CDC now says coronavirus ‘does not spread easily’ on surfaces

நாம் தொடும் மேற்பரப்புகள்- பொருட்களின் மூலம் கொரோனா எளிதில் பரவாது - அமெரிக்க நோய் தடுப்பு மையம்

நாம் தொடும் மேற்பரப்புகள்- பொருட்களின் மூலம் கொரோனா எளிதில் பரவாது - அமெரிக்க நோய் தடுப்பு மையம்
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நாம் தொடும் மேற்பரப்புகள் அல்லது பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவாது என்று கூறி உள்ளது.
வாஷிங்டன்
 
 உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நேற்றுமட்டும்  23,285 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 1,518 தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 1,551,853 பாதிப்புகள் மற்றும் 93,439 இறப்புகள் பதிவாகி உள்ளது. 

நியூயார்க் மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93  ஆயிரத்தை தாண்டி உள்ள  நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  நாம் தொடும் மேற்பரப்புகள் அல்லது பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவாது என்று கூறி உள்ளதாவது:

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.  ஒரு நபர் கொரோனா வைரஸைக் கொண்டிருக்கும் ஒரு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொட்டு பின்னர் அவர்களின் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் கொரோனா தொற்றை பெறலாம் என்பதை வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழி இதுவாக கருதப்படவில்லை, ஆனால் இந்த வைரஸைப் பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று சிடிசி வலைப்பக்கம் கூறுகிறது.

வைரஸ் எளிதில் பரவாத பிற வழிகள் விலங்குகள் முதல் மக்கள் அல்லது மக்கள் முதல் விலங்குகள் வரை என்று சிடிசியின் புதுப்பிக்கப்பட்ட வலைப்பக்கம் கூறுகிறது.

சி.டி.சி அதன் வழிகாட்டலை எப்போது புதுப்பித்தது என்பது தெளிவாக இல்லை. இந்த கருத்துக்கான கோரிக்கைக்கு நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அறிகுறிகள் காட்டாதவர்களால் கூட - வைரஸ் முக்கியமாக ஒருவருக்கு பரவுகிறது என்று சிடிசி தொடர்ந்து குறிப்பிடுகிறது.
 
மளிகைப் பொருட்கள் கொரோனா வைரஸை பரப்ப எந்த ஆதாரமும் இல்லை.

குறிப்பாக, ஒருவருக்கொருவர் முக்கியமாக 6 அடிக்குள்ளேயே, நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடையே இது பரவுகிறது, தொற்று உள்ள ஒருவர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது, துளிகளால் வேறொரு நபரின் வாய் அல்லது மூக்கின் மூலம் பரவுகிறது என கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மாதம் உணவு மூலம் வைரஸ் பரவக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
2. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
3. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.
4. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் - இங்கிலாந்து
கொரோனா பாதிப்பு சிவப்பு பட்டியலில் அமெரிக்கா அங்கிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்வார்கள் என இங்கிலாந்து கூறி உள்ளது.