உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் என அரசாங்கங்கள் நம்பக்கூடாது - அமெரிக்க விஞ்ஞானி + "||" + Top HIV scientist says don’t count on having a coronavirus vaccine anytime soon

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் என அரசாங்கங்கள் நம்பக்கூடாது - அமெரிக்க விஞ்ஞானி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் என அரசாங்கங்கள் நம்பக்கூடாது - அமெரிக்க விஞ்ஞானி
எப்போது வேண்டுமானலும் கொரோனாவுக்கு எதிரான வெற்றிகரமான தடுப்பூசி கிடைக்கும் என அரசாங்கங்கள் நம்பக்கூடாது என அமெரிக்க விஞ்ஞானி கூறி உள்ளார்,
வாஷிங்டன்

அமெரிக்க புற்றுநோய், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் மனித மரபணு திட்டங்களின் ஆராய்ச்சியாளரான வில்லியம் ஹசெல்டின் கூறியதாவது:-

நோய்களை பரவதொடங்கும் போதெல்லாம் நோய்த்தொற்றுகளை கவனமாகக் கண்டுபிடிப்பதன் மூலமும் கடுமையான தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலமும் நோயை நிர்வகிப்பதே இப்போது சிறந்த அணுகுமுறையாகும்.

கொரோனா தடுப்பூசியை உருவாக்க முடியும் என்றாலும், நான் இதை நம்பமாட்டேன்.

பிற வகை கொரோனா வைரஸ்களுக்கு முன்னர் உருவாக்கிய தடுப்பூசிகள் மூக்கில் உள்ள சளி சவ்வுகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டன, அங்கு வைரஸ் பொதுவாக உடலில் நுழைகிறது.

ஒரு பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லாமல் கூட, தொற்றுநோய்களைக் கண்டறிந்து, வெளிப்படும் நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். 

முககவசங்களை அணியவும், கைகளை கழுவவும், மேற்பரப்புகளை சுத்தமாக வைதிருக்கவும், சமூக தூரத்தை கடைபிடிக்கவும் வேண்டும்

சீனாவும் வேறு சில ஆசிய நாடுகளும் அந்த மூலோபாயத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தின, அதே நேரத்தில் அமெரிக்காவும் பிற நாடுகளும் வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரையும் “வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்த” போதுமான நடவ்டிக்கை எடுக்கவில்லை.

சீனா, தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன.அதே நேரத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகியவை மோசமான செயல்களைச் செய்துள்ளன. கொரோனா பரிசோதனையில் தடுப்பூசிகள் விலங்குகள் மீதான சோதனையில் நுரையீரல் போன்ற உறுப்புகளில் வைரசை குறைக்க முடிந்தது, இருப்பினும் நோய்த்தொற்றுகள் இருந்தன.

சிகிச்சைக்காக கொரோனாவில் மீண்ட நபர்களிடம் இருந்து ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மாவை நன்கொடையாகப் பெறுகின்றனர், மேலும் மருந்து தயாரிப்பாளர்கள் அந்த சீரம் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட பதிப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
2. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
3. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
4. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
5. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்
உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு ஏற்பட்டுள்ள இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம் என கூறப்படுகிறது.