தென்ஆப்பிரிக்காவில் சோகம் பிறந்து 2 நாளே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி


தென்ஆப்பிரிக்காவில் சோகம் பிறந்து 2 நாளே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 21 May 2020 9:00 PM GMT (Updated: 21 May 2020 7:21 PM GMT)

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கேப் டவுண்,

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகின் எந்தவொரு கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தென்ஆப்பிரிக்கா உள்ளது.

அங்கு இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 330-க்கும் அதிகமானோர் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் கேப் டவுனில் கொரோனா தாக்கிய கர்ப்பிணி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, வெண்டிலேட்டர் மூலம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இந்த தகலை உறுதிப்படுத்தியுள்ள அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அந்த குழந்தையின் தாய்க்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

Next Story