தெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு


தெற்கு சூடானில் பழங்குடியின மக்களிடையே மோதல்; 300 பேர் சாவு
x
தினத்தந்தி 21 May 2020 9:30 PM GMT (Updated: 21 May 2020 7:25 PM GMT)

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஜூபா,

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இதற்கிடையில் அங்குள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி பயங்கர மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் ஜொங்லெய் மாகாணத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் இருதரப்பையும் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அந்த மாகாணத்தில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் 3 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story