லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் - டிரம்ப்அறிவிப்பு


லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் - டிரம்ப்அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 5:52 AM GMT (Updated: 22 May 2020 10:31 AM GMT)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் 96,354 பேர் பலியாகியுள்ளனர், மேலும், 16,20,902 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.இந்நிலையில், கொரோனா வைரஸால் நாம் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் அறிவித்தார்.

அடுத்தடுத்த டுவீட்டில், திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அறிவித்துள்ளார்.



Next Story