கொடிய கொரோனா சீனாவிலிருந்து தான் வந்தது, அதை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்- டொனால்டு டிரம்ப்


கொடிய கொரோனா சீனாவிலிருந்து தான் வந்தது, அதை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 22 May 2020 6:20 AM GMT (Updated: 22 May 2020 10:23 AM GMT)

கொடிய கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் வந்தது, அமெரிக்கா அதை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்காவில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டனர், மேலும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் அதன் எல்லைக்குள் பரவுவதை கட்டுப்படுத்த சீனா நட வடிக்கை எடுக்கவில்லை என அதன் இயலாமையை தொடர்ந்து டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

சீனாவுக்கு எதிராக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எந்த அறிகுறிகளையும் அவர் இதுவரை காட்டவில்லை

மிச்சிகனில் நடைபெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க தலைவர்களுடனான ஒரு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உரையாற்றும் போது கூறியதாவது:-

"கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வந்தது. நாங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் ஆனால் மை உலரவில்லை, திடீரென்று கொரோனா வைரஸ் பரவியது. நாங்கள் அதை எளிதாக  எடுத்துக் கொள்ளப் போவதில்லை" என கூறினார்.

Next Story