இந்தியாவை விட ராணுவத்திற்கு 3 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கிய சீனா


இந்தியாவை விட ராணுவத்திற்கு 3 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கிய சீனா
x
தினத்தந்தி 22 May 2020 10:03 AM GMT (Updated: 22 May 2020 10:41 AM GMT)

சீனா பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை 179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது, இது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

பெய்ஜிங்: 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக அதிக நிதி ஒதுக்கும் சீனா கடந்த ஆண்டு 177.6 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை உயர்த்தியுள்ளது, இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

உலகின் மிகப் பெரிய இராணுவமான 20 லட்சம் வீரர்களை கொண்ட சீனா, 2020 ஆம் ஆண்டில் தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து 6.6 சதவீதமாகக் குறைக்கும் என்று நாட்டின் உயர்மட்ட சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரசுக்கு (என்.பி.சி) வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட வரைவு பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஒற்றை இலக்க வளர்ச்சியைக் காண்கிறது.

இது சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகும் என்று அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த ஆண்டு பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் கடந்த ஆண்டின் 177.61 பில்லியனை விட 1.27 டிரில்லியன் யுவான் (சுமார் 179 பில்லியன் அமெரிக்க டாலர்) இருக்கும் என்று  தேசிய மக்கள் காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைவு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த பாதுகாப்பு செலவினம் உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு செலவினமான அமெரிக்காவின் கால் பகுதியே ஆகும், அதே நேரத்தில் தனிநபர் செலவினம் பதினேழில் ஒரு பங்காகும் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) கருத்துப்படி, 2019 ஆம் ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு செலவினங்களின் இராணுவ செலவு புள்ளிவிவரங்கள் 232 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

சீப்ரா தனது பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 732 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, சீனாவின் பெரிய பாதுகாப்பு நவீனமயமாக்கல் உந்துதல் இந்தியா மற்றும் சுற்றி உள்ள  நாடுகளை நியாயமான அதிகார சமநிலையை உறுதிப்படுத்த பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை உயர்த்தத் தள்ளுகிறது.

2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பட்ஜெட் 66.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 4,71,378 கோடி) என்று இந்திய பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (ஐடிஎஸ்ஏ) எழுதியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சமீபத்திய பட்ஜெட் 179 பில்லியன் அமெரிக்க டாலர் இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகமாகும்.

சீனாவின் பாதுகாப்பு செலவினம் பல ஆண்டுகளாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.3 சதவீதமாக உள்ளது, இது உலகின் சராசரியான 2.6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சீனா தனது பாதுகாப்புப் படைகளை மறுசீரமைத்தது, இராணுவத்தை மூன்று லட்சம் வீரர்களாக குறைத்தது, சீனா வெளிநாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியதால் அதன் கடற்படை மற்றும் விமான சக்தியை மேம்படுத்தியுள்ளது.

சீனாவில் தற்போது ஒரு விமானம் தாங்கி உள்ளது, இரண்டாவது விமானம் தாங்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மூன்றாவது  கட்டப்பட்டு வருகிறது.

அதிகாரபூர்வ ஊடக அறிக்கையின்படி, சீனா கொல்லைப்புறமான தென் சீனக் கடல் (எஸ்சிஎஸ்) உட்பட உலகெங்கிலும் அமெரிக்காவுக்கு சவால் விட சீனா எதிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு விமானம் தாங்கிகளைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

தென்சீன கடல் பகுதி முழுவதையும் தனது சொந்தம் என கூறுகிறது.  வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா புருனே மற்றும் தைவான் ஆகியவை இதற்கு எதிரான உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன.

தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் இரண்டிலும் சீனா கடுமையாக போட்டியிடும் பிராந்திய மோதல்களில் ஈடுபட்டுள்ளது.

சீனா இப்பகுதியில் பல தீவுகள் மற்றும் மலைகளை தனதாக்கி இராணுவமயமாக்கியுள்ளது.

இரு பகுதிகளும் தாதுக்கள், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் நிறைந்ததாகக் கூறப்படுகின்றன, மேலும் அவை உலக வர்த்தகத்திற்கும் இன்றியமையாதவை ஆகும்.


Next Story