பாகிஸ்தான் விமான விபத்தில் 99 பயணிகள் உள்பட 107 பேர் பலி


பாகிஸ்தான் விமான விபத்தில் 99 பயணிகள் உள்பட 107 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2020 12:50 PM GMT (Updated: 22 May 2020 12:50 PM GMT)

கராச்சி விமான நிலையத்தில் இறங்க முயன்ற பாகிஸ்தான் விமானம் விபத்தில் சிக்கி 99 பயணிகள் உள்பட 107 பேர் பலியானார்கள்.

கராச்சி, 

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 பயணிகள் விமானம்  99 பயணிகளுடன் லாகூரில் இருந்து கராச்சி வந்தது. கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இதில் விமானம் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த 99 பயணிகள் 8 ஊழியர்கள இந்த விபத்தில் பலியானார்கள்.இதனை கராச்சி மேயர் உறுதி படுத்தி உள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியாகி வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விமானம் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க மூன்று முறை இறங்க முயற்சி செய்து தோல்வியுற்ற பின் 4 வது முறை இறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது.

விமானி விமான என்ஜின்கள்  சக்தியை இழந்துவிட்டதாகவும் விமான விபத்துக்கு முன்னர் ஒரு இறுதி அழைப்பின் போது விமானி விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் தெரிவித்து உள்ளார். 

விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு ஓடுபாதையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதால் விமானி 'மேடே' என்று பலமுறை அழுதார்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மீட்பு ஊழியர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story