உலக செய்திகள்

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது - டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு + "||" + If Corona throws a 2nd wave There is no freeze in the United States - Trump's announcement

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது - டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது - டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 96 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார். முன்னதாக அவர் தன் முக கவசத்தை அகற்றினார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இதைப் பார்க்கும் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று கூறினார்.

ஆனால் சுகாதார வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு டிரம்பை மிச்சிகன் மாகாண அட்டார்னி ஜெனரல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை டிரம்ப் ஏற்கவில்லை. “கொரோனா வைரஸ் சோதனையை வழக்கமாக செய்து கொண்டு வருவதால் இது தேவையில்லை” என்று அவர் கூறிவிட்டார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.

நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல. ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்
உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான முதல் தடுப்பூசி தயார் என ரஷியா அறிவித்துள்ளது. தடுப்பூசியை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளன.
2. கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் சாவு ஒரேநாளில் 6,257 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் பலியாகி உள்ளனர். ஒரேநாளில் 6,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா 256 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 256 பேர் உயிரிழந்தனர்.
4. கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கேட்ட வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை துவங்க உள்ளது.
5. கொரோனா தொற்றில் இருந்து மீண்ட போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு‘உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு போற்றுதலுக்குரியது’
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். ‘உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு போற்றுதலுக்குரியது’ என்று பெருமிதத்துடன் கூறினார்.