உலக செய்திகள்

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம் + "||" + Miss Universe New Zealand finalist Amber-Lee Friis dead at 23

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம்

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நியூசிலாந்து அழகி மர்ம மரணம்
மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கபட்ட நியூசிலாந்து அழகி அம்பர்-லீ ஃப்ரைஸ் 23 வயதில் மரணம் அடைந்தார் .
வெலிங்டன்

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் நியூசிலாந்து அழகி அம்பர்-லீ ஃப்ரைஸ்( வயது 23) இவர் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார். நியூசிலாந்து காவல்துறை இதை உறுதிப்படுத்தியது. அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அது தற்கொலை என்று டெய்லி மெயில் தெரிவித்து உள்ளது.

மிஸ் வேர்ல்ட் நியூசிலாந்தின் தலைமை நிர்வாக அதிகாரி நைகல் காட்ஃப்ரே பேஸ்புக் பதிவில் ஃப்ரைஸின் மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஃப்ரைஸ் 2018 மிஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து போட்டியில் பங்கேற்று 20 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.