உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது + "||" + Brazil's coronavirus outbreak reaches 21 thousand

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரேசிலியா, 

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 53,68,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,42,341 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரசால் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரேசிலில் புதிதாக 9,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,40,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 630 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 21,678 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 1,35,430 பேர் குணமடைந்துள்ளனர்.  

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து முதல் இடத்தில் அமெரிக்கா (பாதிப்பு - 16,54,906 பேர், உயிரிழப்பு - 98,093 பேர்) நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.