உலக செய்திகள்

ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு + "||" + O.C.I Restructuring of Cardholders: Welcome to Indigenous Indians

ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு
ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு கட்டுப்பாடு தளர்வு அளிக்கப்பட்டதற்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன், 

உலக அளவில் இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (ஓ.சி.ஐ.) அட்டை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமையை தவிர, இதர உரிமைகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவலைத்தொடர்ந்து, ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு, விசா மற்றும் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. இவற்றை தளர்த்துமாறு அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஓ.சி.ஐ. அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதற்கு அமெரிக்கவாழ் இந்தியர்களான சமூக ஆர்வலர் பிரேம் பண்டாரி உள்பட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது, தங்களுக்கு நிம்மதி அளிப்பதாக அவர்கள் கூறினர்.