உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல் + "||" + H1B visa reform bill filed in US parliament

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘எச்1 பி’ விசா சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்த நாளில் இருந்து ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி ‘எச்1 பி’ விசாவை பெறுவதற்கான நிபந்தனைகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது.

இந்த நிலையில் ‘எச்1 பி’ மற்றும் ‘எல் 1’ விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, ‘எச்1 பி’ விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்யும். ஆனால் அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதில் அந்த இடத்தில் எச்1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை, செனட் சபை என 2 அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு இந்த மசோதா மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதா நிறைவேறி சட்டமாகும் பட்சத்தில் அது அமெரிக்காவில் தற்போது படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு: அமெரிக்கர்களுக்கு விசா தடை விதித்து சீனா பதிலடி
திபெத் விவகாரம் தொடர்பாக, சீன அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனா இதற்கு பதிலடியாக, அமெரிக்கர்களுக்கு விசா தடை விதித்துள்ளது.
2. விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு
விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு: 4 நாடுகளுக்கான விசாவை இந்தியா ரத்து செய்தது
கொரோனா வைரசால் அதிகம் பாதித்த நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.