உலக செய்திகள்

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Coronavirus infects 8,600 people in one day in Russia

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று

ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று
ரஷியாவில் ஒரே நாளில் 8,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாஸ்கோ, 

ரஷியாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 8,600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 481 ஆக உயர்ந்திருக்கிறது.

இதையொட்டி ரஷிய தேசிய கொரோனா பதிலளிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “84 பிராந்தியங்களில் மொத்தம் 8,599 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டுள்ளது. 3,777 பேருக்கு மருத்துவ ரீதியில் அறிகுறிகள் இல்லை. புதிதாக பாதிப்புக்கு ஆளானவர்களில் 2,516 பேர் மாஸ்கோவில் பதிவாகி உள்ளனர். ஏப்ரல் இறுதிக்கு பிறகு இதுதான் அங்கு குறைவான எண்ணிக்கை ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 5,363 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை - 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது
ரஷிய நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது.
2. ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது - விமானி உடல் கருகி சாவு
ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானி உடல் கருகி உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் அதிக அளவாக ஒரே நாளில் 66,258 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் அதிக அளவாக ஒரே நாளில் 66,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலி: இதுவரையில் 1,898 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலியாகினர். 4 மாவட்டங்களில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் 1,898 பேர் இறந்து உள்ளனர்.
5. ஆவடி மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா
ஆவடி மாநகராட்சி பகுதியில் சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் உள்பட ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.