ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவு


ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 24 May 2020 8:14 PM GMT (Updated: 24 May 2020 8:14 PM GMT)

ஜப்பானின் ஹஜிஜோ-ஜீமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.


* பிலிப்பைன்சில் நேற்று ஒரே நாளில் 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதே போல் பலி எண்ணிக்கையும் 868 ஆக அதிகரித்துள்ளது.

* நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள தாராபா மாகாணத்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போது, கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* ஜப்பானின் ஹஜிஜோ-ஜீமா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

Next Story