உலக செய்திகள்

50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா: உலக சுகாதார நிறுவனம் உறுதி + "||" + Corona for more than 50 million people: The World Health Organization confirmed

50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா: உலக சுகாதார நிறுவனம் உறுதி

50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா: உலக சுகாதார நிறுவனம் உறுதி
50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மாஸ்கோ, 

உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கொரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்கு பாதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் (நேற்று முன்தினத்துடன்) முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக பாதித்துள்ளது.

இதேபோன்று 24 மணி நேரத்தில் 5,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகிலேயே அதிகளவில் வட, தென் அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உள்ளது, 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
2. தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு
கொரானாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
3. சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு
சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் ஒருவர் இறந்ததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
4. ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்தது
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1.51 லட்சத்தை கடந்துள்ளது.
5. அதிகாரிக்கு கொரோனா: நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல்
அதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.