உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா? + "||" + Will the Prime Minister's Advisor Resign in Curfew in the UK?

இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?

இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டன், 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த உதவியாளரும், அவரது தலைமை உத்தி ஆலோசகராகவும் இருப்பவர் டொமினிக் கம்மிங்ஸ். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அவர், கொரோனா பரவலை தடுக்க அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மீறி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் வீட்டை விட்டு வெளியேறி 250 மைல் தொலைவில் உள்ள தனது பெற்றோர் இல்லத்துக்கு சென்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இது அங்குள்ள பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.

இதையடுத்து ஊரடங்கு விதிமீறிய அவர் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அழுத்தம் தந்து வருகின்றனர். இதனால் அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அவரை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியபோது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
3. மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
4. கொரோனா சமூக தொற்றாக மாறுகிறதா இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டால், லீஸ்டர் போலவே லண்டனிலும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
5. ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி
ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.