உலக செய்திகள்

ரஷ்யாவில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 8,946 people in Russia have been confirmed infected with coronavirus

ரஷ்யாவில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 55,29,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,47,166 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,53,427 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 92 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,633 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,18,798 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (16,88,709 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (3,65,213  பேர்) உள்ளன

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,87,536 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,87,536 ஆக உயர்ந்துள்ளது
4. ரஷ்யாவில் இன்று மேலும் 5,204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக உயர்ந்துள்ளது.