சீனாவில் 87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டு


சீனாவில் 87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டு
x
தினத்தந்தி 25 May 2020 5:36 PM GMT (Updated: 25 May 2020 5:36 PM GMT)

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரை காப்பாற்றியதற்காக, மருத்துவர்களை அதிபர் ஜி ஜின்பிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.

பீஜிங், 

சீனாவின் உகான் நகரில்  முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார்  196  நாடுகளில் பரவியுள்ள கொரோனா, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் இந்த நோய்த்தொற்று கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தபோதிலும் அவ்வப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று வரை   சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதில் 36 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 30 பேர் அந்த வைரசின் பிறப்பிடமான உகான் நகர் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவில் கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த 87 வயது முதியவருக்கு 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணமடைய செய்துள்ளனர். 

இது குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில் இறுதிவரை மனதளராமல் முதியவரை மீட்ட மருத்துவர்களின் சேவை, தன்னை ஈர்த்தாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அதிபர் ஜின்பிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Next Story